திமுகவில் இளம் பெண்கள் பேரவை என்ற புதிய பிரிவு தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கீழ் இம்மாத இறுதியில் இளம்பெண்கள் பேரவை தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும் முற்போக்குச்சிந்தனையுடன் களத்தில் செயல்படும் 7 பெண்கள் மாநில துணை செயலாளர்களாக தேர்வு செய்யப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை திமுக தலைமை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.