Advertisment

இன்று கூடுகிறது தி.மு.க. பொதுக்குழு!

Advertisment

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (09/09/2020) காலை 10.00 மணிக்கு நடக்கிறது. காணொளிக்காட்சி மூலம் நடக்கும் கூட்டத்தில் 67 இடங்களில் இருந்து தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்பட 70- க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொள்கின்றனர். அதேபோல் தி.மு.க. பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு முறைப்படி தேர்வு செய்யப்படுகின்றனர்.

Advertisment

3,500 பேர் பங்கேற்கும் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் செல்போன் கொண்டு செல்ல அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக தகவல் கூறுகின்றன.

Chennai DMK PARTY general committee
இதையும் படியுங்கள்
Subscribe