Advertisment

சுயேச்சையாக களம் காணும் திமுகவினர்; சந்தோஷத்தில் அதிமுக வேட்பாளர்

DMK seeks domain independently! ADMK candidate happy!

தமிழக முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக சூடுபிடித்துள்ள நிலையில், தலைநகரான சென்னையிலும் தேர்தல் பரச்சாரம் பரபரப்பாகியிருக்கிறது. சென்னை மாநகராட்சியில் 15 மண்டலத்தில் 200 வார்டுகளிலும் பிரச்சாரம் கலைக்கட்டியுள்ளது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

Advertisment

சென்னையின் முதல் மண்டலமானதிருவொற்றியூர் பகுதியில் உள்ள 14 வார்டுகளில் மொத்தமாக 2,63,607 வாக்குகள் உள்ளன. இதில் 7-வது வார்டு அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. குப்பன் என்பவரின் மகன் கார்த்திக் போட்டியிடுகிறார். இவரை வெற்றிபெற செய்வதற்காக, திமுகவின் முக்கிய பிரமுகர்களிடம் லட்சங்களில் பணத்தைக்கொடுத்து திமுக சார்பில் டம்மி வேட்பாளரை நிறுத்தச் சொல்லி பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

அதேசமயம், திமுகவின் உறுப்பினர் ஆதிகுருசாமி என்பவரும் அந்த வார்டில் சுயேச்சையாக களம் கண்டுள்ளார். இதனால், திமுகவின் வாக்குகள் பிரியும் என்றும் அதன்மூலம் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்றும், அதனால் தாங்கள் சந்தோஷத்தில் இருக்கிறோம் என்றும் ர.ர.க்கள் சொல்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து திமுக சார்பாக4, 5, 10, 12வது ஆகிய வார்டுளில் போட்டியிடும் வேட்பாளர்கள் திருவொற்றியூர் மண்டல குழுத்தலைவருக்காக மள்ளுக்கட்டி வருகிறார்களாம். அதேசமயம், முன்னாள் மண்டல குழுத்தலைவரான ஜெயராமன் நான்குவது வார்டில் கூட்டணிக் கட்சியின் சார்பாக கமியூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடுவதால், அவர் வெற்றி பெற்றால் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

admk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe