வரும் ஜூலை 24ம் தேதியுடன் தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு சென்ற ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது.

Advertisment

anna arivalayam

தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில் திமுக மூன்று உறுப்பினர்களையும், அதிமுக மூன்று உறுப்பினர்களையும் தேர்வு செய்து அனுப்பலாம். இந்தத் தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறுகிறது.

Advertisment

இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களின் பெயர் இன்று அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறும் என்றும், மதிமுக சார்பில் வைகோ இடம்பெறுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தின்படி, மதிமுகவிற்கு ஒரு மாநிலங்களவைத் தொகுதியை ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.