Advertisment

ஜூலை 16- ஆம் தேதி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்!

dmk mps meeting held on upcoming june 16th

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 19- ஆம் தேதி அன்று கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் தொடங்குகிறது.

Advertisment

இதனையொட்டி சென்னையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் வரும் ஜூலை 16- ஆம் தேதி அன்று மாலை 05.00 மணிக்குதி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Advertisment

இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது தி.மு.க. தரப்பில் முன் வைக்க வேண்டிய தமிழக மக்கள் நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்தும், நாடாளுமன்றத்தில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

meetings MPs
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe