சேலத்தில் இன்று இரண்டு அடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இது அரசு விழா என்பதால் சேலம் தொகுதியின் திமுக எம்.பி., எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் வடக்கு சட்டசபை தொகுதி, திமுக எம்.எல்.ஏ ராஜேந்திரன் ஆகியோர் நிகழிச்சியில் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பேசும் போது திமுகவினர் எதிர்ப்பு கோஷமும்,அதிமுகவினர் வாழ்த்து கோஷங்களையும் எழுப்பினர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

eps

மேலும் திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் கூறுகையில், நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை மனதில் கொண்டு அவசரமாக பாலத்தை முதல்வர் திறந்து வைத்துள்ளார்.ஆனால் இன்னும் பாலம் கட்டும் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை என்று குற்றம்சாட்டினார். அப்போது திமுகவினர் ஆரவாரத்தை உண்டாக்கினர் இதனால் திமுக,அதிமுக தொண்டர்களிடையே ஒரு விதமான சலசலப்பு ஏற்பட்டது.மேலும் இரண்டு கட்சியினருக்கும் இடையே பிரச்னை வராமல் இருக்க போலீஸ் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Advertisment