Advertisment

ராஜ்யசபாவின் உரிமைக்குழுவில் திமுக எம்.பி. வில்சன் நியமனம்!

Wilson

Advertisment

ராஜ்யசபாவின் உரிமைக் குழு உறுப்பினராக திமுக எம்.பி.யும் வழக்கறிஞருமான பி.வில்சன் நியமிக்கப்பட்டிருக்கிறார். ராஜ்யசபாவுக்கான உரிமைக் குழு நிலைக்குழுவில் 10 உறுப்பினர்கள் இடம்பெறுவர். ஒவ்வொரு வருடமும் இந்த பட்டியலில் உள்ள உறுப்பினர்கள் மாற்றப்படுவார்கள். ராஜ்யசபாவில் உள்ள கட்சிகளின் பலத்துக்கேற்ப ஒவ்வொருக்கட்சிக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

அந்த வகையில் உரிமைக்குழுவுக்கான உறிப்பினர்கள் பட்டியலை மாற்றியமைத்திருக்கிறார் ராஜ்யசபாவின் இணைச் செயலாளர் சுரேந்திரகுமார் திரிபாதி.

அந்த பட்டியலில், ஸ்ரீஹரிவான்ஸ், அனில் ஜெயின், குமார்கேதார், சுஜித்குமார், நரசிம்மராவ், சரோஜ் பாண்டே, அபிஷேக்மனுசிங்வி, ராகேஷ் ஷின்ஹா, சுதன்ஸ் திரிவேதி, பி.வில்சன் ஆகிய 10 எம்.பி.க்கள் உரிமைக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

Advertisment

மூத்த வழக்கறிஞரான வில்சன் நியமிக்கப்பட்டதற்கு திமுக எம்.பி.க்களும், வழக்கறிஞர்களும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

wilson
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe