Advertisment

விஜய் பாணியில் ரஜினி, ராமதாஸை கலாய்த்த திமுக எம்பி!

வருமான வரித்துறையின் சோதனை, பாஜகவினர் படப்படிப்புத்தளத்தில் நடத்திய போராட்டம், வேன் மீது ஏறி செல்பி என கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார் விஜய். அதுமட்டும் இல்லாமல் அவர் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தின் 'ஒரு குட்டி கதை' என்ற சிங்கிள் காதலர் தினத்தன்று வெளியாக உள்ளது. இந்த பாடலில் அரசியல் சார்ந்த கருத்துக்கள் பேசப்படும் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Advertisment

DMK MP tweet about rajinikanth and ramadoss

இந்நிலையில் 'ஒரு குட்டி உண்மை கதை சொல்லட்டுமா' தனது டிவிட்டர் பக்கத்தில் கூறி நடிகர் ரஜினிகாந் மற்றும் பாமக நிறுவனர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பெயரை குறிப்பிட்டு வம்பிலுத்திருக்கிறார் திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார். அந்த பதிவில், "2021ல் தமிழ்நாட்டில் இரண்டு பேர் மிக பெரிய '#அவமானமான_தோல்வி'யை சந்திக்கப்போரங்க இந்த அவமரியாதையை உங்களுக்கு அளிக்க போவது அர்ஜுனன்/கிருஷ்ணர் என்று நீங்கள் நம்பும் இருவர். டெல்லியில் செய்ததை விட மிக சிறப்பாக செய்வார்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.

Advertisment

நேற்று '#திமுக_தலைவர்_விஜய்'என்று ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வந்த நிலையில் திமுக எம்.பி விஜய் பாணியில் 'ஒரு குட்டி உண்மை கதை சொல்லட்டுமா' என கூறி பதிவிட்டிருப்பது உற்று கவனிக்கப்படுகிறது.

actorvijay dmk mp rajini Ramadoss
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe