யாருப்பா அது எங்க ஐயா பெயரில் #ஊரடங்கு_நீடிக்க வாய்ப்புள்ளதாக தவறான செய்தி வெளியிட்டது.
இத்தகைய தவறான செய்திகள் வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
வேண்டாம் ஐயா வேண்டாம்.
உங்க மேல நீங்களே சட்டபடி நடவடிக்கை எடுத்தா வரலாற்றில் பதிவு ஆகிடும்.
அந்த தப்ப பண்ணாதீங்க pic.twitter.com/so9SSJbXRS
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) June 15, 2020
தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளது. இதுபற்றி தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக்குப் பின்னர் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் வரும் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 12 நாள்கள் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்த நிலையில் தருமபுரி திமுக எம்.பி டாக்டர்.செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஊரடங்கு குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், யாருப்பா அது எங்க ஐயா பெயரில் "ஊரடங்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக" தவறான செய்தி வெளியிட்டது. இத்தகைய தவறான செய்திகள் வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வேண்டாம் ஐயா வேண்டாம். உங்க மேல நீங்களே சட்டபடி நடவடிக்கை எடுத்தா வரலாற்றில் பதிவு ஆகிடும். அந்தத் தப்ப பண்ணாதீங்க என்றும், நான்கு மாவட்ட முழு ஊரடங்கு செய்தியைப் பகிர்ந்து,எங்கள் கோரிக்கையை ஏற்று இன்னும்'மா' ஆஜராகவில்லை. எங்கு இருந்தாலும் உடனடியாகவந்து பதிவிடுமாறுகேட்டுக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.