அதே கதை....
அதே இட்லி.....
வேறு இடம்....
வேறு நபர்கள்.....
இப்படியும் சில மனிதர்கள்..... https://t.co/RxYWoDQnnV
சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு பேட்டியில் பேசும் போது, பிரபாகரன் புது சோப்புக்கட்டியுடன்பழைய சோப்புக் கட்டியைச்சேர்த்து ஓட்ட வைத்துக்கொள்வார், இதை நான் சொல்லி தான் ஈழ மக்களுக்கே தெரியும் என்றும், பொட்டு அம்மன் வீட்டிற்குச் சென்று சாப்பிட போகும் போது அங்கு பரிமாறப்பட்ட உணவு குறித்தும் பேசியுள்ளார். இது குறித்து சீமான் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி திமுக எம்.பி. டாக்டர்.செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் சீமான் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஒரு பேட்டியில் நிறைய காமெடி கன்டென்ட் குடுத்திருக்கிறாரு திரு.சீமான்என்றும், சீமான்இறுதி போருக்கு முன் பிப்ரவரியில் ஒரு மாத காலம் ஈழத்தில் இருந்ததாகவும் இரண்டே முறை தான் தலைவரைச் சந்தித்ததாகவும் சொல்கிறார். இந்தக் கட்டுக்கதைகள் அனைத்தும் 2 நாட்களில் அரங்கேறின என நம்புகிறீர்களா, தோழர்களே. அந்த வருடம் அந்த மாதத்தில் அவர் கடவுச்சீட்டு உண்மையை உலகிற்கு நன்கு விளக்கும் என்றும், அதே கதை, அதே இட்லி,வேறு இடம்,வேறு நபர்கள்,இப்படியும் சில மனிதர்கள் என்றும், வடிவேலு இல்லாத குறையைப் போக்கும் சீமான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.