Advertisment

தோல்வியடைந்த ஜெகனின் திட்டம்... கனிமொழி எடுத்த முயற்சி... அதிகாரத்தை வைத்து எடப்பாடி பழனிசாமி வகுத்த வியூகம்!

dmk

கரோனா பரபரப்புக்கு மத்தியிலும் வெளிநாட்டு முதலீடுகளையும், தொழில் நிறுவனங்களையும் தமிழகத்துக்கு இழுக்கும் வியூகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வகுத்து வருகிறார் என்று கூறுகின்றனர்.கரோனாவால் பேரழிவைச் சந்தித்த சீனாவில் இருந்து பிரபல ஸ்டீல் கம்பெனிகளான போஸ்கோவும் ஹூண்டாயும் வெளியேறத் தயாராகி விட்டதாகச் சொல்லப்படுகிறது. இதையறிந்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அந்தக் கம்பெனிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ஏதேனும் ஒரு துறைமுகத்திலிருந்து, 50 கிலோ மீட்டர் தூரத்துக்குள், குறைந்த பட்சம் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிலம் ஒதுக்க வேண்டும் என்று அந்தக் கம்பெனிகள் கேட்பதாகக் கூறுகின்றனர். ஆந்திராவில் அதற்குச் சரியான வாய்ப்பில்லை என்றும் சொல்லப்படுகிறது.

Advertisment

இந்த நேரத்தில், தூத்துக்குடி துறைமுகம் பகுதிகளில் அந்தக் கம்பெனிகள் எதிர்பார்க்கும் அளவுக்கு நிலவசதி இருப்பதைச் சுட்டிக் காட்டிய, தொகுதியின் தி.மு.க எம்.பி.யான கனிமொழி, அந்தக் கம்பெனிகளோட பேசத்தொடங்கினார். அப்போது கனிமொழி எடுத்த முயற்சியை, அரசு அதிகாரம் கையில் இருக்கிற தெம்பில், அதிகாரிகளோடு இது தொடர்பாக எடப்பாடி ஆலோசித்து இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும் அந்த நிறுவனங்களை இங்கே கொண்டு வருவதற்காகத் தலைமைச் செயலாளர் சண்முகத்தின் தலைமையில் ஒரு குழுவை எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ளதாகவும்கூறுகின்றனர்.

Advertisment

admk eps kanimozhi politics
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe