/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/402_31.jpg)
அரக்கோணம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனின் மனைவி அனுசுயா மறைவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''நாடாளுமன்ற உறுப்பினரும், பாரத் பல்கலைக்கழகத்தின் தலைவருமான ஜெகத்ரட்சகன் அவர்களின் மனைவியார் அனுசுயா அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
ஜெகத்ரட்சகனின் மனைவி அனுசுயா சமூகத்தில் உயர்நிலையில் இருந்தாலும் மிகவும் எளிமையானவர்; விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றவர். தொடக்க காலத்திலிருந்தே ஜெகத்ரட்சகனின் முன்னேற்றத்திற்கும், அரசியல் வாழ்க்கைக்கும் பின்புலமாக இருந்தவர். அவரது மறைவு ஜெகத்ரட்சகனுக்கு அனைத்து வகையிலும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். இதிலிருந்து அவர் விரைவில் மீண்டு வர வேண்டும்.
அனுசுயா அவர்களை இழந்து வாடும் ஜெகத்ரட்சகன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)