அரக்கோணம் தி.மு.க. எம்.பி.யும் முன்னாள் மத்திய இணையமைச்சருமான ஜெகத்ரட்சகனை பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் நேரில் சந்தித்தார்.

Advertisment

ஜெகத்ரட்சகன் மனைவி அனுசுயா கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானார்.மறைந்த அனுசுயா உடலுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. முன்னணித் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பல்வேறு கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

Advertisment

இந்தநிலையில் நேற்று தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் ஜெகத்ரட்சகனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் மற்றும் தனது இரங்கலை தெரிவித்து, அனுசுயாவின் திருவுருடப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.