இந்தியாவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 பேர் ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 492 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு மாநில அரசுகளும் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர். அந்த வரிசையில் தமிழகத்திலும் இன்று (24/03/2020) மாலை அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் அரசு அறிவித்த 144 தடை உத்தரவும் இன்று மாலை 06.00 மணி முதல் அமலுக்கு வருகிறது.இதனால் தமிழகத்தில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களும் அரசின் அறிவுறுத்தலின் பேரில் ஊழியர்களுக்கு விடுப்பு, வீட்டில் இருந்தே பணிபுரிய ஊழியர்களுக்கு அனுமதி அளித்துள்ளனர்.

dmk

— தயாநிதி மாறன் Dayanidhi Maran (@Dayanidhi_Maran) March 24, 2020

align="center" data-entity-type="file" data-entity-uuid="b892a48f-3f13-4778-984e-fae297a7b725" height="336" src="/sites/default/files/inline-images/image%20%2848%29_0.jpg" width="535" />

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில், மத்திய சென்னை திமுக எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதிமாறன், தனது டவிட்டேர் பக்கத்தில் கரோனா வைரஸ் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த கரோனா ஒருவரை பாதித்தால் நாளுக்கு நாள் என்ன அறிகுறி ஏற்படும் என்பது குறித்த ஒரு வீடியோவை வெளியிட்டு, இந்த கரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.