Advertisment

உங்களைப் போன்ற ஆட்களிடம் இதுதான் பிரச்சனை... தலைமைச் செயலாளர் மீது பரபரப்பு புகார் கூறிய திமுக எம்.பி தயாநிதிமாறன்! 

dmk

Advertisment

திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினின் 'ஒன்றிணைவோம் வா' செயல் திட்டத்தின் மூலம் நிவாரண உதவிகளை தி.மு.க.வினர் செய்து வருகின்றனர். திமுகவின் சார்பில் கரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து வந்துள்ள ஒரு லட்சம் கோரிக்கைகளை தமிழக அரசிடம் நேரில் முன் வைப்பதற்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதிமாறன், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் அடங்கிய குழு தலைமைச் செயலாளரைச் சந்தித்து மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைக் கொடுக்க சென்றனர்.

இந்த நிலையில் தலைமைச் செயலாளரிடம் நடந்த சந்திப்பு குறித்து திமுக எம்.பி தயாநிதி மாறன் செய்தியாளர்களிடம் பேசும் போது, "திமுக ஆற்றி வரும் நிவாரணப் பணிகளைப் பார்த்து தலைமைச் செயலாளருக்கு பொறாமை என்றும், எம்.பி.க்களை மதிக்காமல் டிவியில் அதிக சத்தத்தை அலறவைத்து அதைக் கவனித்துக்கொண்டு இருந்தார் என்றும் பரபரப்பு புகார் கூறினார். மேலும் உங்களைப் போன்ற ஆட்களிடம் இதுதான் பிரச்சனை என்றுஅவர் கூறியதைக் கேட்டு அதிர்ந்துபோனோம்" என்றும் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

Speech politics dhayanithi maran admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe