தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தமிழகம் முழுவதும் தீவிரமாக பணியாற்றி வருகிறது. ஒருபுறம் இரகசிய தகவலின் அடிப்படையில் ஆங்காங்கே வாகனங்கள் சோதனைசெய்து வருகிற நிலையில், மறுபுறம் பிரதான கட்சிகளின் முக்கிய பிரமுகர்களின் வீடுகளில்வருமான வரித்துறை உதவியுடன் சோதனை நடத்தி வருகிறது.
அதனைத் தொடர்ந்து இன்று (02.04.2021) சென்னை அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக், ‘ஜீ ஸ்கொயர்’ பாலா ஆகியோரது வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனைக் கண்டிக்கும் விதமாக அண்ணாநகரில் திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேசமயம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரையின் வீடு உள்ளிட்ட இடங்களில் துணை ராணுவத்தின் பாதுகாப்புடன் வருமானவரித்துறையினரின் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/dmk-it-raid1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/dmk-it-raid-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/dmk-it-raid-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/dmk-it-raid-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/dmk-it-raid-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/dmk-it-raid-6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/dmk-it-raid-7.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/dmk-it-raid-9.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/dmk-it-raid-10.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/dmk-it-raid-11.jpg)