Advertisment

தனி கோஷ்டியாக செயல்படும் தி.மு.க. எம்.எல்.ஏ...

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவுநாளையொட்டி, பாளையங்கோட்டையில் நெல்லை கோர்ட்டு எதிரே அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு 20.08.2019 அன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Advertisment

mkstalin

இந்த நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் ஞானதிரவியம், தனுஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் பூங்கோதை, கீதாஜீவன், மைதீன்கான் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, இளைஞர் அணி மாநில துணை செயலாளர் ஜோயல், மாவட்ட செயலாளர்கள் இரா.ஆவுடையப்பன் (கிழக்கு), அப்துல்வகாப் (மத்திய மாவட்டம்), சிவபத்மநாதன் (மேற்கு), முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பசாமி பாண்டியன், மாலைராஜா, ராதாபுரம் ஒன்றிய பொறுப்பாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், நெசவாளர் அணி மாநில செயலாளர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisment

T.P.M. Mohideen Khan

இந்த நிகழ்ச்சியில் பொதுவாக திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியானாலும் அக்கட்சியின் தலைவர்கள் வரும்போது தொகுதி எம்எல்ஏ, அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், தொகுதியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் அந்த தலைவர்கள் வரும்போதுதான் உடன் சென்று மரியாதை செலுத்துவார்கள்.

ஆனால் மு.க.ஸ்டாலின் பாளையங்கோட்டையில் உள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்துவதற்கு முன்பே,தொகுதி எம்எல்ஏவான மைதீன்கான் ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தி போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளாராம். கட்சி பொறுப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகள் கட்சித் தலைவருடன் சென்று மரியாதை செலுத்துவதற்காக காத்திருக்கும்போது, மைதீன்கான் மட்டும் தனியாக மரியாதை செலுத்துகிறார் என்றும்,மைதீன்கான் தனி கோஷ்டியாக செயல்படுகிறார் என்றும்அத்தொகுதியில் உள்ளகட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

MLA Palayankottai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe