Advertisment

நோட்டாவை விடக் குறைவான வாக்கு பெற்ற கரு.நாகராஜன்... கரு.நாகராஜனை கடுமையாக விமர்சித்த செந்தில்பாலாஜி!

dmk

Advertisment

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கரூர் எம்.பி. ஜோதிமணியை பா.ஜ.க.வைச் சேர்ந்த கரு.நாகராஜன் தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சனம் செய்தார். கரு.நாகராஜன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயலுக்குப் பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக காங்கிரஸ் கட்சி இதுகுறித்து தன்கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு கரு.நாகராஜனைக்கண்டித்துஅறிக்கைவெளியிட்டது.

Advertisment

இந்தச் சம்பவம் குறித்து தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், 6,95,697 மக்கள் ( 63%) வாக்களித்து வெற்றி பெற்ற, மக்கள் பிரதிநிதி, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் S.ஜோதிமணி அவர்கள், 23 ஆண்டுகள் பொதுவாழ்வில் நேர்மையையும் கண்ணியத்தையும், தூய்மையையும் தொடர்ந்து கடைப்பிடிப்பவர். ஒன்றியக் குழு உறுப்பினராகத் தனது அரசியல் வாழ்வைத் தொடங்கி இன்று நாடாளுமன்ற உறுப்பினர் வரை உயர்ந்துள்ளார். மேலும் விரைவில் இதற்கு ஒரு முடிவை காலமே பா.ஜ.க.வினருக்கு வழங்கும். Nota வை நம்பிய மக்கள் கரு.நாகராஜனை நம்பவில்லை. மேலும் கரு.நாகராஜன் பொதுவாழ்வுக்கு அர்த்தமற்றவர் என்பதைத் தேர்தலில் மக்களே விளக்கியுள்ளனர். 63% மக்களின் ஆதரவு பெற்ற S.ஜோதிமணி எங்கே..? NOTA வைவிடக் கீழான வாக்குகளைப் பெற்ற கரு.நாகராஜன் எங்கே..? மக்கள் தீர்ப்பே.. மகேசன் தீர்ப்பு..! நல்ல மாட்டுக்கு ஒரு சூடு..? என்று குறிப்பிட்டுள்ளார்.

issues politics senthilbalaji
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe