Skip to main content

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பொய்யை அம்பலப்படுத்தி வீடியோ வெளியிட்ட திமுக எம்.எல்.ஏ 

Published on 07/02/2022 | Edited on 07/02/2022

 

DMK MLA releases video exposing PMK.  founder Ramdoss lie!

 

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தனது டுவிட்டர் மூலம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், ‘வேலூர் மாநகராட்சியில் எங்கள் கட்சியின் 24வது வார்டு பாமக வேட்பாளர் பரசுராமனை, திமுக மா.செவும், எம்.எல்.ஏ-வுமான நந்தகுமார்  கடத்திச்சென்று அவரை போட்டியிலிருந்து விலக வேண்டும். இல்லையேல் தொழில் செய்ய முடியாது என மிரட்டுகிறார்கள். இது கண்டிக்கதக்கது. மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள் வெற்றி பெறுவதுதான் ஜனநாயகம். செல்வாக்கு இல்லாதவர்கள் அதை வளர்த்துக்கொள்ள வேண்டும். பாமக வேட்பாளரை மிரட்டியவர்கள் மீது தேர்தல் ஆணையமும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனச் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

 

இதற்கு பதில் தந்த திமுக மா.செவும், எம்.எல்.ஏவமான நந்தகுமார், பாமக வேட்பாளர் தான் எங்களிடம் வந்து சீட் கேட்டார். பாமக சின்னத்தில் நின்றால் என்னால் வெற்றி பெற முடியாது, திமுகவின் உதயசூரியன் சின்னம் எனக்கு தந்தால் நான் திமுகவில் இணைகிறேன் என்று சொன்னார். நாங்கள் எங்கள் கட்சி வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கிவிட்டோம் என்று சொன்னோம். பாமக வேட்பாளரை கடத்திச்சென்று வெற்றிப் பெறும் நிலையில் திமுக இல்லை. அவரை மிரட்ட வேண்டிய அவசியமும் இல்லை என மறுத்திருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து திமுக மா.செ தரப்பில் இருந்து ஒரு வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 5 நிமிடம் ஓடும் அந்த வீடியோ பதிவில் திமுக மா.செவின் ஹோட்டலுக்கு பாமக வேட்பாளர் பரசுராமன் பிப்ரவரி 5ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு வருவதும், அங்குள்ள ஹோட்டலின் அலுவலக அறைக்கு சென்று அமர்ந்து வேலூர் எம்.எல்.ஏ கார்த்தியுடன் உரையாடுவதும், அந்த அறைக்கு திமுக மா.செவும், எம்.எல்.ஏவுமான நந்தகுமார் வருவதும் இருவருக்கும் பாமக வேட்பாளர் சால்வை அணிவித்து உரையாடுவது அதில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ பாமக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பாமக வேட்பாளரும், பாமக நிர்வாகிகளும் திமுக மா.செ நந்தகுமார், மாநகர செயலாளர் கார்த்தி இருவரும் பாமக வேட்பாளரை கடத்தினார் என பொய்யாக ஒரு தகவலை தங்களது மேலிடத்துக்கு தெரிவித்துள்ளனர். அதனை நம்பி மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அது பொய்யென நிரூபிக்கும் விதமாக திமுக மா.செ நந்தகுமார் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள வீடியோ ராமதாஸ் சொன்னது பொய் என்பது அம்பலமாகியுள்ளது. இது பாமக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்