கரோனாவால் பாதிக்கப்பட்டு காலமான தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் கரோனா தொற்றால் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 08.05 மணிக்கு சிகிச்சை பலனின்றி ஜெ.அன்பழகன் காலமானார்.
கண்ணம்மாபேட்டையில் தந்தை ஜெயராமன் கல்லறை அருகில் ஜெ.அன்பழகன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கண்ணம்மாபேட்டை மயானத்தில் தி.மு.க. தொண்டர்கள், தெருமக்கள் திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.