Advertisment

ஏழை மருத்துவ மாணவிக்கு உதவிய  திமுக எம்.எல்.ஏ.! 

ddd

மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் கல்வி கட்டணம் கட்டமுடியாமல் ஏழை மாணவ-மாணவிகள் தவித்து வருவது ஒரு புறம் எனில், நல்ல மனம் படைத்தவர்கள் உதவியால் அவர்கள் முதலாமாண்டில் சேர்ந்த பிறகு இரண்டாம் ஆண்டிற்குரிய கல்வி கட்டணம் கட்ட முடியாமல் பரிதவிப்பதும் மற்றொரு புறம் சோகத்தை வரவழைப்பதாக இருக்கிறது.

Advertisment

அப்படி, தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மதுரை மாவட்டம் வில்லாபுரத்தைச் சேர்ந்த கார்த்திகா தேவி, தனது இரண்டாம் ஆண்டு கல்வி கட்டணத்தை கட்ட முடியாமல் பரிதவித்து வந்துள்ளார்.

Advertisment

இந்த பரிதவிப்பை, திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ. டாக்டர் சரவணனின் கவனத்துக்கு சென்றிருக்கிறது. உடனே கார்த்திகாதேவியின் வீட்டிற்கு சென்று, இந்தாண்டுக்கான கல்வி கட்டணம் 2 லட்ச ரூபாயை அவரிடம் வழங்கியுள்ளார் மக்கள் மருத்தவர் சரவணன் எம்.எல்.ஏ.! காலத்தையும் சூழலையும் கருதி ஏழை மருத்துவ மாணவிக்கு உதவிய சரவணனின் செயலை அரசியலைக் கடந்து பலரும் வாழ்த்துகின்றனர்!

Medical Student help MLA
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe