DMK MLA gave gold to 2 thousand people!

கடலூரில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் தி.மு.க மூத்த முன்னோடிகள் 2 ஆயிரம் பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் தலைமை தாங்கி, தி.மு.கவின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழியை வழங்கினார். அப்போது அவர், திமுகவின் முன்னோடிகள் கட்சியின் வளர்ச்சிக்கு எவ்வாறு பாடுபட்டார்கள், அதனால் தற்போது கட்சி எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பது குறித்து விளக்கிப் பேசினார்.

இதில் கூட்டுறவு சங்க செயலாளர் ஆதி பெருமாள் ரவிச்சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், கடலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் ராதிகா பிரேம்குமார், கீர்த்தனா ஆறுமுகம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாந்தி பழனிவேல், சித்ராலயா ரவிச்சந்திரன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர் உள்ளிட்ட தி.மு.க.வினர்,பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை மருத்துவர் பிரவீன் ஐயப்பன் செய்திருந்தார்.

இந்நிகழ்வில் மருத்துவ குழுவினர், தி.மு.க மூத்த முன்னோடிகள், பொதுமக்கள் என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் போதைப் பொருட்களை ஒழிப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.