ADVERTISEMENT

"பெயரில் மட்டும்தான் ஸ்மார்ட் உள்ளது"- மு.க.ஸ்டாலின் பேச்சு!

10:15 PM Feb 21, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடந்த 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், "விதிகளைத் திருத்தி மூன்று மாதங்களில் ரூபாய் 40,000 கோடிக்கு டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் டெண்டர் விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும். இளைஞர்களின் நலனில் முதல்வர் பழனிசாமிக்கு அக்கறை இல்லை. ஒரு கோடி பேர் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர். ஆண்டுக்கு இரண்டு லட்சம் வேலைவாய்ப்பு தருவதாகக் கூறிய நீங்கள் எத்தனை பேருக்கு வேலை தந்துள்ளீர்கள்? வீட்டிலிருந்தே புகாரளிக்கலாம் என முதல்வர் கூறுகிறார்; ஆனால் அது நிவர்த்திச் செய்யப்படுமா? ஒரு காலத்தில் டாலர் சிட்டியாக இருந்த திருப்பூர் தற்போது டல் சிட்டியாக உள்ளது.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், டாலர் சிட்டியான திருப்பூரின் வளர்ச்சி மீண்டும் மீட்டெடுக்கப்படும். தி.மு.க. ஆட்சி அமைந்ததும், அத்திக்கடவு- அவிநாசி திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்படும். 'ஸ்மார்ட்' சிட்டி திட்டத்தின் பெயரில் மட்டும்தான் ஸ்மார்ட் உள்ளது. ஊழல் திட்டத்திற்கு மாற்று பெயராக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றனர்" என்று குற்றம் சாட்டினார்.

ADVERTISEMENT

இந்த கூட்டத்தில் தி.மு.க.வின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT