Advertisment

தலைமை அறிவிப்பை மீறிய திமுகவினர்... மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

dmk MK Stalin's meeting

Advertisment

மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் இன்று காலை 10 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகிவரும் நிலையில், சில இடங்களில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையே திமுக வேட்பாளர்கள் வென்றுள்ளனர். தலைமையின் அறிவிப்புக்கு மாறாக செயல்படுவதாக திமுக கூட்டணிக் கட்சிகள் சில இடங்களில் குற்றச்சாட்டை வைத்துள்ளன.

இந்நிலையில் கூட்டணி தர்மத்தை மீறி திமுகவினர் போட்டியிட்டு வெற்றிபெற்றது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக திமுகவினர் போட்டியிட்டது மட்டுமில்லாது, திமுக தலைமை அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக திமுக வேட்பாளர்கள் களமிறங்கியது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

vck congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe