Advertisment

மாற்று கட்சியினர் வருகையால் திமுகவில் உட்கட்சி பூசல்!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியது. தமிழக இடைத்தேர்தலில் 13 இடங்களை திமுக வெற்றி பெற்றது. அதிமுக, தினகரனின் அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தோல்வியை சந்தித்தது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரன் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படு தோல்வியை சந்தித்தது. இதனால் தினகரன் கட்சியில் இருந்து அதிருப்தியாளர்கள் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். தேர்தலுக்கு முன்பு செந்தில்பாலாஜி தினகரன் கட்சியில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்தார்.

Advertisment

dmk

பின்பு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் திமுக சார்பாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆக தேர்ந்த்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வனும் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். திமுகவில் இணையும் மாற்று கட்சியினருக்கு திமுகவில் முக்கியத்துவம் கொடுத்து வருவதால் திமுகவில் ஆரம்பித்தில் இருந்து இருக்கும் நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று திமுகவில் இருக்கும் நிர்வாகிகள் சிலர் புலம்பி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisment
stalin annaarivalayam politics
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe