Advertisment

இதற்குத்தான் சென்னைக்கு வருகிறோமா? கோபத்தில் வெற்றி வேட்பாளர்கள்... ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!

அண்மையில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிவாகை சூடிய தி.மு.க. நிர்வாகிகள், ஸ்டாலினிடம் ஆசி வாங்கும் எண்ணத்தில் அறிவாலயத்துக்குத் தொடர்ந்து படையெடுத்து வந்து கொண்டு இருக்கிறார்கள். அப்படி வந்து போகும் அவர்கள், அடிக்கடி மக்களைச் சந்திக்கும் ஸ்டாலின், தேநீர்க் கடைகளில் அமர்கிறார், பொதுமக்களிடம் கை கொடுத்துப் பேசுகிறார், செல்ஃபி எடுத்துக் கொள்கிறார். இதையெல்லாம் பார்த்து ரசித்த நாங்கள், அவரிடம் ஆசி வாங்கும் நேரத்திலாவது அவர் கவனத்தில் இடம்பிடிக்க வேண்டும் என்ற ஆசையோடு சென்னைக்கு வருகிறோம். அப்படி வரும் எங்களை சால்வையை அணிவிக்கக்கூட விடாமல், திருப்பதியில் ஜருகண்டி ஜருகண்டி’ன்னு துரத்துவது போல், அவசரகதியில் அனுப்பி விடுகிறார்கள்.

Advertisment

dmk

இதனையடுத்து இதற்குத்தான் இவ்வளவு தூரம் பயணம் செய்து சென்னைக்கு வருகிறோமா? என்று ஆதங்கப்படுகிறார்கள். கட்சியின் சீனியர்களோ, ஸ்டாலினிடம்முன் அனுமதி பெறாமல் திடீரென நூற்றுக்கணக்கில் திரண்டுவரும் எல்லோரையும் அவர் சந்திப்பது என்பது கஷ்டம்தான். இந்த நிலையில் திருச்சியில் ஜனவரி 31-ந் தேதி, தமிழகம் முழுக்க வெற்றிபெற்ற தி.மு.க. ஊராட்சிமன்ற நிர்வாகிகளின் மாநாடு நடக்க இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.

Advertisment

Meeting Candidate results Election stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe