Advertisment

நீங்க இப்படிப் பேசலாமா? பொறுப்பான கட்சி... பா.ஜ.க.வின் கரு.நாகராஜனை கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்!

dmk

Advertisment

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கரூர் எம்.பி. ஜோதிமணியை பா.ஜ.க.வைச் சேர்ந்த கரு.நாகராஜன் தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சனம் செய்தார். கரு.நாகராஜன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயலுக்குப் பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக காங்கிரஸ் கட்சி இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு கரு.நாகராஜனுக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது.

Advertisment

இந்தச் சம்பவம் குறித்து தி.மு.க.வின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அவரின் கேவலமான வார்த்தைகளைக் கேட்டு கடுங்கோபத்துடன் இருந்த நான், 'அமைதியா இருங்க. பொறுப்பான கட்சியின் மூத்த தலைவர் நீங்களே இப்படிப் பேசலாமா’ என்று நெறியாளர் சொன்னபோது என்னையறியாமல் சிரித்துவிட்டேன். பொறுப்பான கட்சி, மூத்த தலைவர்...குட் காம்பினேஷன் என்று குறிப்பிட்டுள்ளார்.

congress Speech udhayanithi stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe