Advertisment

தோல்வி குறித்து ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு... கலக்கத்தில் நிர்வாகிகள்!

இடைத்தேர்தலில் தோல்வி குறித்து தெரிந்து கொள்ள திமுக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது பற்றி அரசியல் வட்டாரங்களில் கேட்ட போது, கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு பயன்படவில்லை என்று ஸ்டாலினிடம் வாங்கிய ஓட்டுக் கணக்கை காட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது. விக்கிரவாண்டியில் பொன்முடி, அனைத்து தேர்தல் வேலைகளையும் தான் பார்த்து கொள்கிறேன் என்று தலைமையிடம் கூறியுள்ளார். இதனால் பிற மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பல சீனியர்களையும் வேலை பார்க்க அனுமதிக்கவில்லை என்ற புகார் தலைமையிடம் சென்றதாக சொல்லப்படுகிறது.

Advertisment

dmk

பொன்முடியிடம் இதைப்பற்றி ஸ்டாலின் விசாரித்த போது, தொகுதி பொறுப்பாளர்களாக வந்த எ.வ.வேலுவும், ஜெகத்ரட்சகனும் தான் நிலைமையை சொதப்பி விட்டார்கள், மேலும் தலைமையில் பொறுப்பு வாங்குவதற்கு நடக்கிற போட்டியில் தொகுதியை கெடுத்து விட்டார்கள் என்று பொன்முடி கூறியதாக சொல்லப்படுகிறது. பிறகு சுனில் என்பவர் தலைமையில் இயங்கும் ஓ.எம்.ஜி.யின் ஆலோசனையின் படி ஸ்டாலின் செயல்படுவதும் வெற்றியை கொடுக்கவில்லை என்று அவரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.

Advertisment

மேலும் இதே கூட்டணி, இதே ஓ.எம்.ஜி. வியூகத்துடன் எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்ற தோடு , சட்டமன்ற இடைத்தேர்தலிலும் 13 இடங்களில் வெற்றி பெற்றோம் என்று திமுக தலைமை நினைப்பதாக சொல்லப்படுகிறது. அப்போது தி.மு.க.வின் தேர்தல் வியூகம் இந்தியாவுக்கே வழிகாட்டி என்று சொன்னார்கள். தற்போது 2 இடைத்தேர்தலில் தோற்றதும் அதே வியூகங்கள் மைனஸாக தெரியுது. எப்போதும் தோல்வி ஒரு அனாதை. அதற்கு யாரும் பொறுப்பேற்காமல், அடுத்தவர் பக்கம் தள்ளிவிடுவார்கள் என்று நினைக்கும் ஸ்டாலின், அதிக ஓட்டு வித்தியாசத்தில் தோற்றது எப்படி என்று வருத்தத்துடன் அது சம்பந்தமான ரிப்போர்ட்டை வாங்கி ஆலோசித்து வருகிறாராம்.

admk byelection results stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe