முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆரின் 103வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசும் போது, திமுகவில் கலைஞர் கருணாநிதிக்கு பிறகு அவரது மகன் மு.க.ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். தற்போது மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண நபர் திமுகவில் உயர்ந்த பதவிக்கு வர முடியுமா? அதிமுகவில் உள்ள அனைவரும் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும். அதிமுகவில் இருப்பவர்கள் அனைவருமே முதல்வர் ஆவதற்கான தகுதி உடையவர்கள். ஒரு பழனிசாமி அல்ல. ஓராயிரம் பழனிசாமிகள் அதிமுகவில் உள்ளனர் என்றும் பேசினார்.

Advertisment

dmk

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த கருத்துக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் பதிலடி கொடுக்கும் வகையில் கூறியள்ளார். அதில், அதிமுகவில் அனைவருமே முதலமைச்சர்கள் தான் என்று சொன்ன எடப்பாடி பழனிச்சாமி தனது முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்துக்கு விட்டுக்கொடுப்பாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.