Advertisment

கத்தார் திமுக நிர்வாகிகள் கூட்டம்

கடந்த 10.11.2019 அன்று நடைபெற்ற கழகத்தின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை ஆதரித்து நன்றி தெரிவிக்கும் வகையில் கத்தார் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

Advertisment

dmk - Kathar

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு உறுப்பினர் உரிமைச்சீட்டு வழங்கி கிளைக்கழகம் அமைத்துக் கொள்ள அங்கீகாரம் அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தத்திற்கு மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

எதிர்வரும் 14.11.2019 வியாழன் மாலை 7 மணியளவில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான கூட்டம் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது.அண்ணாவின் வழியில், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் அடியொற்றி மு.க.ஸ்டாலின் பின் அணிவகுத்து அயராது உழைத்து கழக வெற்றிக்கு பாடுபடுவோமென உறுதிமொழி ஏற்கப்பட்டது என கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisment

கூட்டத்திற்கு ராஜூ ரஞ்சன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் AV சாமி, பூபதி பாலா, ராஜூ முருகன், அஷ்ரப் அலி, அறந்தை செந்தில்குமார், பாலாஜி, மனோ கௌதம், வாளாடி ராஜ்குமார், மதன்குமார், சௌகத் அலிகான், செந்தில்குமார் தங்கவேலு, ரஞ்சித்குமார் ராஜ்குமார், இளையராஜா, பிரபு மற்றும் மகளீர் அணி சார்பாகா திருமதி சரண்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

administrators Executives kathar meetings
இதையும் படியுங்கள்
Subscribe