Advertisment

“பழனிச்சாமி அவர்களே, வாயை மூடி, பேசவும்” - திமுக  கண்டனம்!

DMK IT Wing condemn Palaniswami

Advertisment

கீழடி ஆய்வு விசயத்தில் பாஜக அரசைக் கண்டித்து எடப்பாடி பழனிசாமி பேசாமல் இருப்பதாக திமுக கடுமையாக விமர்சித்திருக்கிறது. இது தொடர்பாக திமுக ஐ.டி.விங் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழர்களின் பண்பாட்டுப் பெருமையை நிலை நிறுத்திய கீழடி அகழாய்வு முடிவுகளை ஒன்றிய பாஜக அரசு ஏற்க மறுக்கும் வஞ்சகத்தை அதன் கூட்டணியில் உள்ள அதிமுக ஏன் கண்டிக்க மறுக்கிறது?" என்று திமுக ஐடி விங் கேட்டதற்கு பதில் சொல்லத் திராணியின்றி, கார்ட்டூன் போட்டு அவமதித்து விட்டார்கள் என்று தனது கட்சியின் ஐடி விங் மூலம் புகார் கொடுத்திருக்கிறார்.

அதிமுகவின் ஊடகங்கள் ஒவ்வொரு நாளும் தி.மு.க தலைவரையும், கட்சி முன்னோடிகளையும், குடும்பத்தினரையும் உருவக் கேலி(Body Shaming) முறையில் இழிவுபடுத்தி வெளியிடுகின்ற அளவிற்கு, திமுக ஐடி விங் ஒரு போதும் தன் தரத்தை குறைத்துக் கொண்டதில்லை. அதிமுகவின் செயல்பாடற்ற தலைமையைத்தான் அம்பலப்படுத்தியிருந்தோம். கீழடி அகழாய்வு உண்மைகளைப் புதைக்க முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் வஞ்சகத்திற்கு துணை போகும் துரோகத்தை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிற அதிமுக, இதை திசை திருப்பலாம் என நினைத்து, திமுக ஐடி விங் மீது எத்தனை புகார்கள் கொடுத்தாலும், உண்மையை ஒருபோதும் மறைக்க முடியாது.

பாஜகவிடம் பம்மிப் பதுங்கி தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து துரோகம் செய்யும் அதிமுக கீழடி விவகாரத்திலும் பாஜகவின் காலடியில்தான் மண்டியிட்டுக் கிடக்கிறது. கார்ட்டூன் பதிவின் கருத்தை / கேப்ஷனை விட்டுவிட்டு சாதாரண கார்ட்டூனுக்கு இத்தனை முன்னாள் அமைச்சர்கள் மீடியா முன்வந்து பேசுகிறீர்களே? இதில் எத்தனை பேர் கீழடிக்காக, தமிழர் நாகரீகத்தை காப்பதற்காக குரல் கொடுத்தீர்கள் என்ற கேள்விக்கு பதில் உண்டா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.

admk Keezhadi
இதையும் படியுங்கள்
Subscribe