Advertisment

பா.ஜ.க.வில் இணையப்போகும் தி.மு.க.வின் முக்கியப் புள்ளி? பா.ஜ.க. தலைவருடன் சந்திப்பு பின்னணி... அதிருப்தியில் தி.மு.க. தலைமை!

dmk

தி.மு.க. நிர்வாகிகளுடன் தொடர்ச்சியாக காணொலி காட்சி மூலம் தினமும் ஆலோசனை நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். சமீபத்தில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்களிடம் கரோனாவின் பாதிப்பு எந்த வகையில் இருக்கிறது என்பதையும் விரிவாகக் கேட்டறிந்தார் ஸ்டாலின். அப்போது மாவட்டச் செயலாளர்கள் தெரிவித்த பிரச்சனைகளை மத்திய- மாநில அரசுகளின் கவனத்துக்கு தி.மு.க. எடுத்துச் செல்லும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைச் செய்யுமாறும் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

Advertisment

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த வி.பி.துரைசாமி தி.மு.க.வில் துணைப் பொதுச்செயலாளராக உள்ளார். இவர் சட்டப்பேரவை துணைத் தலைவராகவும் எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார். இதனையடுத்து திடிரென்று தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனை சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சம்பவத்தால் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது, நடந்த முடிந்த ராஜ்யசபா தேர்தலில் துரைசாமிக்கு வாய்ப்பு வாங்கப்படும் என்று எதிர்பார்த்துள்ளார். ஆனால் ஆனால் அதே சமுதாயத்தைச் சேர்ந்த அந்தியூர் செல்வராஜூக்குபதவியை ஸ்டாலின் வழங்கினார். இதனால், துரைசாமி அதிருப்தியில் இருந்து வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதோடு அவர் வகிக்கும் துணை பொதுச்செயலாளர் பதவிக்கும் தி.மு.க. தலைமை வேறு ஒருவரை நியமிக்க தி.மு.க. தலைமை ஆலோசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் தி.மு.க.வில் ராஜ்யசபா சீட் கிடைக்காத அதிருப்தியில் உள்ள வி.பி.துரைசாமி விரைவில் பா.ஜ.க.வில் இணையத் திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. துரைசாமியின் இந்த நடவடிக்கையால் தி.மு.க. அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Advertisment

Leader Meeting politics stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe