‘திமுக ஹீரோ; ஆளுநர் வில்லன்’ - புது விளக்கம் கொடுத்த அண்ணாமலை

DMK Hero; The Governor is the villain; Annamalai gave a new interpretation

ஆளுநர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினால் திமுகவிற்கு சங்கடம் ஆகிவிடும் என தமிழ்நாடுபாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பொங்கல் விழாவில் தமிழ்நாடுபாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இதன் பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுகவிற்கு எப்பொழுதும் ஒரு எதிரி வேண்டும். இது சினிமா பாணியிலான அரசியல். கதாநாயகனுக்கு எப்பொழுதும் ஒரு வில்லன் வேண்டும். திமுக ஆளுநரை வில்லனாகச் சித்தரிக்கிறது. ஆளுநரை வைத்து அரசியல் செய்கிறார்கள். ஆளுநரை வில்லனாகக் காட்டுகிறார்கள்.

ஒவ்வொரு மாதமும் ஆளுநரை வைத்து புதிய பிரச்சனைகளை உருவாக்குவது தான் திமுகவின் வேலை. ஆளுநர் செய்தியாளர்களிடம் நேரடியாகப் பேச ஆரம்பித்துவிட்டார் என்றால் திமுகவிற்கு மிகுந்த சங்கடம் ஆகிவிடும். அரசு தொடர்ந்து ஆளுநரை சீண்டிக்கொண்டே இருந்தால் ஆளுநர் அமைதிக்காப்பாரா என்பது எனக்குத் தெரியாது.

மேற்குவங்க ஆளுநர் செய்தியாளர்களைச் சந்திக்கிறார். கேரள ஆளுநரும் செய்தியாளர்களைச் சந்திக்கிறார். அதேபோல் பேட்டி கொடுத்தார் என்றால் திமுக நிலை என்னவாகும்” எனக் கூறினார்.

Annamalai
இதையும் படியுங்கள்
Subscribe