DMK has proved the majority

Advertisment

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றுகிறது திமுக. இதனையடுத்து, திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தமிழக சட்டமன்ற தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார். இதற்காக திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை அல்லது நாளை மறுநாள் கூட்டப்படும். அதன்பிறகு, மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்க கவர்னர் பன்வாரிலாலிடம் திமுக அனுமதி கோரும்.

பின்னர் அதனையேற்று ஆட்சி அமைக்க ஸ்டாலினை அழைப்பார் கவர்னர். திமுக அமைச்சரவைப் பட்டியல் ராஜ்பவனுக்கு அனுப்பி வைக்கப்படும். இதனையடுத்து அமைச்சரவை சகாக்களுடன் முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்வார் மு.க.ஸ்டாலின். அதே போல் கொடைக்கானலில் ஸ்டாலின் ஓய்வு எடுத்த போது தயாரிக்கப்பட்ட அமைச்சரவை பட்டியலில் பல மாற்றங்களை செய்யவிருக்கிறாராம் ஸ்டாலின்.