திமுகவில் இருந்தாலும் அரசியல் எல்லைகளைக் கடந்து அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களாலும் நேசிக்கப்பட்டவர்; மதிக்கப்பட்டவர் பேராசிரியர் க. அன்பழகன் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisment

 pmk

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் அவர்கள் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று அதிகாலையில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

Advertisment

தமிழ்நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் மாணவர் பருவத்திலிருந்தே அரசியலில் ஈடுபட்டு வந்தவர். கற்றவர்கள் பலரும் அரசியலில் வருவதற்கு தூண்டுகோலாக இருந்தவர் அவர். கட்சியிலும், ஆட்சியிலும் தாம் வகித்த பதவிகளுக்கு பெருமை சேர்த்தவர் பேராசிரியர் அவர்கள். திமுகவில் இருந்தாலும் அரசியல் எல்லைகளைக் கடந்து அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களாலும் நேசிக்கப்பட்டவர்; மதிக்கப்பட்டவர் ஆவார்.

என் மீது மிகுந்த பாசம் கொண்டவர். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அரசியலில் அதிசயங்களாக திகழ்ந்தவர்கள் வெகுசிலரே. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர் க. அன்பழகனார் அவர்கள். அவரது மறைவு அவரது குடும்பத்திற்கும், திமுகவுக்கும் பேரிழப்பாகும்.

Advertisment

பேராசிரியர் க. அன்பழகனாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திமுகவைச் சேர்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.