Advertisment

தி.மு.க. பொதுச்செயலாளரானார் துரைமுருகன்!

dmk general secretary durai murugan mk stalin announced

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளிக்காட்சி மூலம் தொடங்கியது.

Advertisment

தமிழகம் முழுவதும் 67 இடங்களில் இருந்து சுமார் 3,500 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்பட 70- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Advertisment

இதனிடையே, தி.மு.க.பொதுச்செயலாளராக துரைமுருகன் மற்றும் பொருளாளராக டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இரண்டு பேரும் போட்டியின்றி தேர்வானதாக தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து, இரண்டு பேருக்கும் பொதுக்குழு அரங்க மேடையில் சால்வை அணிவித்து ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

mk stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe