"தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர்களாக ஆ.ராசா, பொன்முடி நியமனம்"- பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

dmk general meeting mk stalin announced deputy general secretary

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர்களாக ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் நியமிக்கப்படுவதாக தி.மு.க. பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளிக்காட்சி மூலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் 67 இடங்களில் இருந்து சுமார் 3,500 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்பட 70- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

dmk general meeting mk stalin announced deputy general secretary

பொதுக்குழுவில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், "தி.மு.க.பொதுச்செயலாளராக துரைமுருகன் மற்றும் பொருளாளராக டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தி.மு.க. சட்டத்திட்ட விதி பிரிவு 17(3) ன் படி ஆ.ராசா, பொன்முடி துணைப்பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்." என்றார்.

இதனால் தி.மு.க.வில் துணைப்பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கை 3-லிருந்து 5- ஆக உயர்ந்தது. துணைப்பொதுச்செயலாளர்களாக ஐ. பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஏற்கனவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

GENERAL MEETING mk stalin
இதையும் படியுங்கள்
Subscribe