Advertisment

மே 13ல் திமுக பொது உறுப்பினர் கூட்டம்; சேலத்தில் நடக்கிறது!

DMK General Meeting on May 13; Going on in Salem!

Advertisment

சேலத்தில், திமுக பொதுஉறுப்பினர்கள் கூட்டம் அமைச்சர் கே.என். நேரு தலைமையில் வெள்ளிக்கிழமை (மே 13) நடக்கிறது.

சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ, மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம். செல்வகணபதி, கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மத்திய மாவட்டம், சேலம் மேற்கு, சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், மே 13ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு, 5 சாலையில் உள்ள ரத்னவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் நடக்கிறது. திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் இக்கூட்டம் நடக்கிறது.

தமிழக முதல்வரும், கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சேலம் வருகை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. சேலம் மத்திய மாவட்டம், மேற்கு, கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கோட்ட நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe