அண்ணா அறிவாலயத்தில் நடந்த பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட திமுகவின் முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர். காணொளிக்காட்சிவாயிலாக நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் 67 இடங்களில் இருந்து சுமார் 3,500 பேர் பங்கேற்றனர். பொதுக்குழுவில் மாவட்டச் செயலாளா் தலைமையில் அந்தந்த மாவட்டத்தின் ஒன்றிய, நகர, பொதுக்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனர்.
2021ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் கூடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.