Advertisment

சீட் கிடைக்காத திமுக நிர்வாகிகள் கலைஞர் சிலையிடம் மனு கொடுத்து முறையீடு!  

vDMK executives who did not get seats petitioned the Kalaignar statue!

Advertisment

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் பரபரப்பாக உள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது வரை அரசியல் கட்சியினரிடையே தொகுதிப் பங்கீடு, கூட்டணி பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைத்துக் கட்சிகளும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கும் வேட்பாளர்கள்அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், திமுகவிலும் பாஜகவிலும் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிமுகவில் சீட் கேட்டு கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் கவுன்சிலர்கள் பாஜகவில் சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் திமுகவினருக்கு அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் பொன்.முத்துராமலிங்கம், தளபதி ஆகியோர் வேட்பாளர்களைத்தேர்வு செய்து இடங்களை ஒதுக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை மாநகராட்சியில் போட்டியிட சீட் கிடைக்காத திமுக நிரர்வாகிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மதுரை மாநகராட்சி 32வது வார்டைச் சேர்ந்த கலையரசி, 27வது வார்டைச் சேர்ந்த ராஜேந்திரன், 28வது வார்டைச் சேர்ந்த சரசு, 24வது வார்டைச் சேர்ந்த முத்துமணி ஆகியோர் திமுகவில் 25 ஆண்டு காலமாக கட்சிக்கு உழைத்தும் சீட் கேட்டும் தங்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்து சிம்மக்கல் பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் சிலைக்கு மனு கொடுத்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe