Skip to main content

கம்யூனிஸ்டுகளை ஒதுக்குகிறதா திமுக..? முத்தரசன் பரபரப்பு அறிக்கை..!

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

Is DMK excluding communists Mutharasan

 

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் தங்களுக்கான கூட்டணியை இறுதி செய்யும் இறுதிக்கட்டத்தில் தொடர்ந்து பயணிக்கின்றன. இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, தேமுதிக கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அதேபோல், திமுக கூட்டணியில் பிரதான கட்சியான காங்கிரஸ் மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக போன்ற கட்சிகளுக்கான பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடந்து வருகிறது.

 

இந்த நிலையில், திமுக கூட்டணியில் உள்ள இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இரட்டை இலக்கு தொகுதிகள், அதாவது குறைந்தபட்சம் ஒவ்வொரு கட்சிக்கும் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், திமுக தரப்பில் ஒவ்வொரு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 5 முதல் 6 சீட்டுகள்தான் தரமுடியும் எனக் கூறப்பட்டிருக்கிறது.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், ‘இவ்வளவு காலம் திமுக கூட்டணியில் இருந்த நமக்கு, திமுக ஒரு மரியாதைக்குரிய பேச்சுவார்த்தையை நடத்தவில்லை’ என ஆதங்கத்தோடு உள்ளார்கள். 3ம் தேதி இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் ஒன்றாக கூடி பேசியுள்ளார்கள். அதில், ‘இந்திய அளவில் மதசார்பற்ற ஒரு கூட்டணியை அமைக்க வேண்டும் என தொடர்ந்து நாம் குரல் கொடுத்து வருகிறோம். குறிப்பாக, தமிழகத்தில் திமுக தலைமையில் நீண்டகாலமாக பயணித்து வந்தோம். அரசியலில் தேர்தல் நிலைப்பாடு மிக முக்கியமான ஒன்று. அந்த அளவில் தொடர்ந்து நாம் பெற்றுவந்த மரியாதைக்குரிய இடங்களைப் பெற வேண்டும். அப்படி இல்லை என்றால் நமக்கான மாற்று நிலையை எடுக்கலாம்’ என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியுள்ளார்கள். ஆனாலும் இன்னும் காலம் இருக்கிறது, பொறுத்திருந்து பார்ப்போம். திமுக நமக்கான மரியாதைக்குரிய இடங்களை வழங்கும்’ என அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பேசியுள்ளார்கள். இறுதியில் இந்தத் தேர்தலில் நாம் போட்டியிட்டு, வெற்றிபெற்று, ஓரிரு இடங்களைப் பெறுவது மட்டுமே லட்சியம் இல்லை. நமது நோக்கம், இந்தத் தேர்தலால் சிதைந்துவிடக்கூடாது என மூத்த நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

 

அதன் அடிப்படையில், ‘திமுக இனிமேல் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தினாலும், பேரம் பேசுவது இருக்கக் கூடாது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தலா 10 இடங்களை ஒதுக்குவதாக இருந்தால் பேசுவோம். இல்லையென்றால் தார்மீக அடிப்படையில் நாம் இந்தத் தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமோ, அதை தெரிவிப்போம் அல்லது மாற்று நடவடிக்கையாக, எந்த அணியில் நாம் இணைவது என்பதும் பேசி முடிவு செய்வோம்’ என இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 

இதன் தொடர்ச்சியாக 4ம் தேதி காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் உள்ள பாலன் இல்லத்தில் நடைபெற உள்ளது. அதில் பேசக்கூடிய முக்கிய விஷயம், ‘கம்யூனிஸ்ட் கட்சிக்கான மரியாதைக்குரிய இடங்களை திமுக தர வேண்டும். இல்லையெனில் இந்தத் தேர்தலில் நாம் மக்களிடம் செய்ய வேண்டிய பிரச்சாரத்தை செய்வோம், தேர்தல் அரசியல் முக்கியமல்ல, கட்சிக்கான மரியாதைதான் முக்கியம்’ என கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளார்கள். இதன் மூலம் திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தர வேண்டிய மரியாதையைக் குறைத்து மதிப்பிடுகிறது என வெளிப்படையாக தெரிகிறது. இதனால், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் திமுக ஒதுக்குகிறது என அக்கட்சிகளின் நிர்வாகிகள் மனக் குமுறலுடன் தெரிவிக்கிறார்கள்.

 

இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ''தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் - தி.மு.க.வுக்கு இடையில் சிக்கல் நிலவுவது போலவும், பேச்சுவார்த்தையில் முறிவு ஏற்படுவது போலவும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்திகள் பரப்பப்படுகின்றன.

 

அத்தகைய செய்திகளில் உண்மை இல்லை என்பதுடன், அது குழப்பம் ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்டது என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுமக்களுக்கு தெளிவுபடுத்திக்கொள்கிறது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக தொடர்கிறது'' எனக் கூறப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Income tax notice to Congress, Communist Party of India

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் ரூ.1,823 கோடி செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 135 கோடியை ஏற்கனவே வருமான வரித்துறை முடக்கியுள்ள நிலையில், தற்போது ரூ. 1823.08 கோடி அபராதம் கட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 1993-94, 2016-17, 2017-18, 2018-19 மற்றும் 2019-20 காலகட்டத்திற்கு உரிய வருமான வரி மற்றும் அதற்குரிய அபராதத்தை செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுபியுள்ளது.

இது குறித்து குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேரிவிக்கையில், மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு எதிராக வரி பயங்கரவாதம் நடைபெறுவதாக காங்கிரஸ் கங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பாஜக இந்திய ஜனநாயகத்தை தகர்க்கும் வேலைகளை செய்து வருவது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 8 ஆண்டு பழைய வருமான வரியை மீண்டும் ஆய்வு செய்து ரூ.1,823 கோடி வரி பாக்கியை கட்டச் சொல்வது விதிமீறல் என காங்கிரஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Income tax notice to Congress, Communist Party of India

இதனைத் தொடர்ந்து ரூ. 11 கோடி வருமான வரி நிலுவையில் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பழைய பான் (P.A.N.) எண்ணை பயன்படுத்தியதற்கு ரூ. 11 கோடி வரி பாக்கியை செலுத்த வேண்டும் என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்தியா கூட்டணிக் கட்சிகளை முடக்கும் வேலையில் மத்திய அரசு ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.