Advertisment

தள்ளி நில்லுங்க, உங்களாலதான் கரோனா பரவுது... திமுக மீது வருத்தத்தில் முஸ்லீம்கள்... அதிமுக, பாஜக போட்ட திட்டம்!

"70 வயசானாலும், அண்ணாச்சி இருக்குற இடத்துல கலகலப்புக்கு பஞ்சமிருக்காது. எப்போதும் யதார்த்தப் பேச்சால எல்லோரையும் ஈர்த்திடுவாரு" என்று பெயரெடுத்தவர், விருதுநகர் தெற்கு தி.மு.க. மா.செ.வும் முன்னாள் அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

Advertisment

தற்போது வைரலாகும் ஒரு வீடியோவில், "நீங்க தள்ளி நில்லுங்கப்பா.. உங்களாலதான் கரோனா பரவுது...''என்று தன்னருகே நின்ற இஸ்லாமிய சமுதாயத்தினரிடம் எரிந்து விழுந்தது தொடர்பாக, அண்ணாச்சியைத் தொடர்புகொண்டு சிறுபான்மை அமைப்பைச் சேர்ந்த ஒருவர் பேச, அந்த உரையாடலும் வைரலாகிவிட்டது.

dmk

“ஏற்கனவே, சங்பரிவார் குரூப், இதைத்தான் முழுப் பிரச்சாரமாக பண்ணிவருகிறது. இப்போ உங்கக்கிட்ட இருந்து இப்படியொரு வார்த்தை வந்தது சங்கடமா இருக்கு அண்ணாச்சி'' என்று அந்த நபர் வருத்தப்படுகிறார்.

Advertisment

http://onelink.to/nknapp

அண்ணாச்சியோ அவரை மாமா என்று உரிமையோடு அழைத்து, "நான் திட்டியது வாஸ்தவம்தான். மாஸ்க் போடாமல் வந்ததால் திட்டினேன். நீங்க எச்சரிக்கையா இல்லேனா, உங்க குடும்பத்திற்குத்தானே பாதிப்புன்னு சத்தம் போட்டேன். நம்ம ஊரில் (அருப்புக்கோட்டை) அதிகாரிகளால் எந்தத் தொந்தரவும் இல்லாம நான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அந்த மாதிரி நல்ல காரியமெல்லாம் வெளியில் வரவில்லை. கெட்டது மட்டும்தானே வேகமா வெளியே வருது. தப்பா நினைக்க வேண்டாம்னு நம்மாளுங்கக்கிட்ட சொல்லிருங்க'' என்று தனக்கேயுரிய இயல்புடன் நிலைமையை விளக்கி சமாதானக் குரலில் பேசியிருக்கிறார்.

தி.மு.க. ஆதரவு இஸ்லாமியர்களின் வாக்குகளை இழுக்க, ஆளுந்தரப்பு கிளப்பிவிட்ட பிரச்சனைதான் இது என்று "உச்'’ கொட்டினார்கள் அருப்புக்கோட்டை உ.பி.க்கள். இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வும் மூக்கை நுழைத்து தன்னாலான பங்களிப்பைச் சிறப்பாகச் செய்துவருகிறது.

admk coronavirus issues politics
இதையும் படியுங்கள்
Subscribe