DMK Election Manifesto Preparation Team Round Trip Begins

திமுகவில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில், திமுக செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், திமுக சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளர் - அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக தகவல் தொழிநுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி.இராஜா, திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., திமுக மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., திமுக மருத்துவ அணிச் செயலாளர் மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் - DMKManifesto2024’ என்ற தலைப்பில் பரிந்துரைகளை அனுப்புவதற்கு பிப்ரவரி 3 ஆம் தேதி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. தேர்தல் அறிக்கையை வடிவமைப்பதற்கான கோரிக்கைகளை அனுப்பி வைத்து தேர்தல் அறிக்கை தயாரிப்பில் மக்கள் பங்களிக்கும் வகையில் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிப்பதற்கு, அண்ணா அறிவாலயம் முகவரிக்கு கடிதங்கள் மூலமாகவோ அல்லது [email protected] என்றமின்னஞ்சல் முகவரி அளிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி எண் மூலம் பகிர்வதற்காக 08069556900 -இல் ஒரு சிறப்பு ஹாட்லைன் அமைக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பதிவிடவும், வாட்ஸ்அப் எண் 9043299441 மூலம் பரிந்துரைகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாடு முழுவதும் தேர்தல் அறிக்கைக் குழு டவுன் ஹால் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. 05.02.24 முதல் குழுவின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு, கருத்துகளை நேரில் பெறுகின்றனர்.

Advertisment

DMK Election Manifesto Preparation Team Round Trip Begins

இதுவரை எழுத்துப்பூர்வமாக, தொலைபேசி வாயிலாக, சமூக ஊடகங்கள் வழியாக, ஆன்லைன் மூலமாக கோரிக்கைகளை மக்கள் ஆர்வமாக அனுப்பி வருகின்றனர். தேர்தல் அறிக்கை பதிவீடுகளுக்கான காலக்கெடுவாக பிப்ரவரி 25 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, பெறப்பட்ட அனைத்து பரிந்துரைகளையும் திமுக அறிக்கை குழு மதிப்பீடு செய்து அதிகாரப்பூர்வத் தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் 05.01.2024 முதல் மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறும் பணியை தொடங்கியுள்ளனர். திங்கட்கிழமை காலை 10.00 மணி அளவில் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலை, காமராஜ் கல்லூரி எதிரில் உள்ள மாணிக்கம் மஹாலில் வைத்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. திமுகவின் தூத்துக்குடி வடக்கு & தெற்கு, விருதுநகர் வடக்கு & தெற்கு, இராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய கருத்துகளை அளிக்கின்றனர்.

Advertisment

தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் - அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விருதுநகர் தெற்கு மாவட்டச்செயலாளர் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், விருதுநகர் வடக்கு மாவட்டச்செயலாளர் - அமைச்சர் தங்கம் தென்னரசு, இராமநாதபுரம் மாவட்டச்செயலாளர் காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

05.02.24ம் தேதி தூத்துக்குடியில் இருந்து தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தனது சுற்றுப் பயணத்தைத்தொடங்கி உள்ளது. கன்னியாகுமரியில் பிப்ரவரி 6 ஆம் தேதியும், மதுரையில் பிப்ரவரி 7 ஆம் தேதியும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. தஞ்சையில் பிப்ரவரி 8 ஆம் தேதியும், சேலத்தில் பிப்ரவரி 9 ஆம் தேதியும், கோவையில் பிப்ரவரி 10 ஆம் தேதியும் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழுவினர் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

திருப்பூரில் பிப்ரவரி 11 ஆம் தேதியும், ஓசூரில் பிப்ரவரி 16 ஆம் தேதியும், வேலூரில் பிப்ரவரி 17 ஆம் தேதியும் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளது. இதேபோன்று, ஆரணியில் பிப்ரவரி 18 ஆம் தேதியும், விழுப்புரத்தில் பிப்ரவரி 20 ஆம் தேதியும், சென்னையில் பிப்ரவரி 21, 22 மற்றும் 23 ஆம் தேதிகளில், நாடாளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் அறிக்கைக் குழுவினருடன் தொடர்பு கொண்டு தங்கள் மாவட்டத்திற்குரிய வணிகர் சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள், மீனவ சங்கங்கள், தொழில் முனைவோர், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் அழைத்து வந்து திமுக தேர்தல் அறிக்கைதயாரிப்புக் குழுவினரைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கின்றனர்.