Advertisment

திமுகவினருக்கு ஏன் இந்த இரட்டை வேடம்? ஜெயக்குமார் 

திமுகவினர் வெளியே நாத்திகவாதிகளாகவும், வீட்டில் ஆத்திகவாதிகளாகவும் இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Advertisment

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

jayakumar

அப்போது, அத்திவரதர் தரிசனத்திற்கு வி.ஐ.பி. பாஸ் கொடுக்குமாறு திமுகவினர் பரிந்துரை கடிதம் கொடுப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், வீட்டுக்குள்ள ஆத்திகவாதிகளாக இருக்கிறார்கள். வெளியில் நாத்திகவாதிகளாக இருக்கிறார்கள். கடவுளின்றி ஒரு செயலும் கிடையாது. இன்றைக்கு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் திமுக எம்பிக்கள் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த பலர் லெட்டர் பேடில் அத்திவரதரை நாங்கள் தரிசிக்கணும், எங்களுக்கு பாஸ் கொடுங்கள் என்று கேட்கிறார்கள். அதற்கு எதுக்கு இரட்டை வேஷம். உள்ள ஒரு வேஷம், வெளியே ஒரு வேஷம் என்றார்.

jayakumar MPs
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe