Advertisment

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு!

DMK district secretaries meeting date announcement

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கான தேதியை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Advertisment

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆகஸ்ட் 16ஆம் தேதி (16.08.2024) காலை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும்.

Advertisment

எனவே மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். கூட்டத்தின் போது திமுகவின் முப்பெரும் விழா குறித்து விவாதிக்கப்பட உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 27 ஆம் தேதி அமெரிக்கா செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக இந்த மாவட்டச் செயலாளர் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அதே சமயம் அதிமுக அவசர செயற்குழு கூட்டமும் ஆகஸ்ட் 16ஆம் தேதி நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Meeting
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe