DMK District Secretaries Meeting ... Date Announcement

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை திமுக தலைமை அறிவித்துள்ளது.

Advertisment

''நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. பதிவான வாக்குகள் பிப்.22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்'' என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், திமுக தலைமை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அறிவித்துள்ளது.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (ஜன.27 ஆம் தேதி) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. காணொளி மூலமாக நடைபெறும் இந்த கூட்டத்தில் திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment