திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு

DMK district secretaries meeting announcement

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நவம்பர் 26 ஆம் தேதி (26.11.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில் சென்னை தியாகராயர் நகர் ஓட்டல் அகார்டில் நடைபெறும்.

அப்போது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த கூட்டத்தில் திமுக இளைஞர் அணி 2 வது மாநில மாநாடு மற்றும் வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் உறுப்பினர்களின் பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது” என தெரிவித்துள்ளார்.

Chennai Meeting
இதையும் படியுங்கள்
Subscribe