Advertisment

கிராம சபைக் கூட்டம் முடிந்த மறுநாளே தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!

DMK District secretaries meeting ..!

21ஆம் தேதி தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Advertisment

வரும் 21ஆம் தேதி மாலை 5 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயத்தில், கலைஞர் அரங்கில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியினர் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Advertisment

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் காரணத்தினால், தமிழகத்தின் இரு பெரும் கட்சிகள் தேர்தலுக்காக தயாராகிவருகின்றன. தி.மு.க. ஏற்கனவே கிராம சபைக் கூட்டம் உள்ளிட்ட தேர்தல் பிரச்சாரங்களை நடத்திவருகிறது. தி.மு.க. தலைவரின் கிராம சபைக் கூட்டம் வரும் 20ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து அவர் தேர்தல் பிரச்சாரப் பணியில் ஈடுபடுவார் எனும் தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கிராம சபைக் கூட்டம் நிறைவடையும் மறுநாளே தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் தங்கள் மவட்டத்தில் உள்ள தொகுதிகளில் என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும்;கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து செயல்பட வேண்டிய விஷயங்கள் என அனைத்து விஷயங்களும் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe