Advertisment

திமுக கொ.ப.செ.வாக  திண்டுக்கல் லியோனி! 

dmk

திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர்களாக திருச்சி சிவா, ஆ.ராசா, தங்க.தமிழ்செல்வன் ஆகியோர் இருந்தனர். இந்த நிலையில், கட்சியின் துணை பொதுசெயலாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார் ஆ.ராசா. மேலும், தங்க தமிழ்செல்வனும் மாவட்ட பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து புதிய கொ.ப.செ.க்கள் யார் என்கிற விவாதம் திமுகவில் எதிரொலித்தபடி இருந்தது.

Advertisment

இந்த நிலையில்,ஆ.ராசாவையும் தங்க. தமிழ் செல்வனையும் கொ.ப.செ.பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக திண்டுக்கல் லியோனியையும், சபாபதி மோகனையும் நியமித்துள்ளது திமுக தலைமை. இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் திமுக பொதுசெயலாளர் துரைமுருகன்.

Advertisment

கொ.ப.செ.வாக நியமிக்கப்பட்ட லியோனிக்கும், சபாபதி மோகனுக்கும் வாழ்த்துகள் குவிந்தபடி இருக்கிறது.

Announcement duraimurugan Dindigul I. Leoni
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe