Advertisment

எந்த ஒரு உதவியும் விவசாயிகளுக்கு திமுக செய்யவில்லை; வானதி சீனிவாசன் பேட்டி!

ddd

திருச்சியில் பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி சார்பில், 450 பெண்கள் புதிதாக பாரதிய ஜனதா கட்சியில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட பாஜகவின் தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

Advertisment

அப்போது, மத்தியில் இருக்கும் அரசாங்கம் எப்படிப் பெண்களை முன் நிறுத்தி நல்ல பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என்பதைப் பல கூட்டங்களில் சென்று தொடர்ந்து விளக்கி வருகிறேன்.தமிழகத்துப் பெண்களிடம் பிரதமர் மோடி எப்படி ஹீரோவாக இருக்கிறார் என்பதை விளக்கி வருகிறோம்.

Advertisment

பா.ம.கவினர்வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கொடுப்பவர்கள் மட்டுமே கூட்டணி எனக் கூறி உள்ளனர். இதில், சாதி வாரி கணக்கெடுப்புக்காக தமிழக அரசு ஆணையம் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. அதை நான் வரவேற்கிறேன். அறிவியல் ரீதியாகக் கணக்கெடுப்பு என்பது கண்டிப்பாகத் தேவைதான். பா.ம.க. கேட்பது குறித்து மாநிலத் தலைவர் எல்.முருகன் ஏற்கனவே தன் கருத்தைக் கூறி விட்டார்.

வேளான் சட்டங்களுக்கு ஆதரவாக முன்னர் பேசிவிட்டு, தற்போது கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்கள் பற்றி அவதூறு பரப்பி வருகின்றனர்.தமிழகத்தில் திமுகவை மாதிரி பொய்ப் பேச யாராலும் முடியாது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரடியாகக் கேட்கிறேன்,சன் டிவி குடும்பம் எத்தனை கோடி சம்பாதித்து வருகிறார்கள்? கலைஞர் டிவியில் எவ்வளவு சம்பாதித்து வருகிறார்கள்? ரெட் ஜெயண்ட் மூவிஸ் துவங்கிய உங்கள் மகன் உதயநிதி ஸ்டாலின் எத்தனை விவசாயிகளுக்கு உதவி இருக்கிறார்?விவசாயத் துறையில் திமுககுடும்பத்தின் முதலீடு என்ன? எந்த ஒரு உதவியும் விவசாயிகளுக்கு திமுக செய்யவில்லை.

கூட்டணியைப் பொறுத்தவரை பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அதிமுக தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினாலும் இன்னும் கூட்டணி குறித்த ஒரு முழுமையான தகவல் தலைமையிடமிருந்து அறிவிக்கப்படாத நிலையில், அந்தக் கட்சிகள் தங்களுடைய நிலைப்பாட்டை உறுதிப்படுத்தாமல் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. அதிமுக எப்படி தன்னுடைய பிரச்சாரத்தைத் துவங்கியுள்ளதோ, அதேபோல பாஜகவும் தன்னுடைய பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கிறது. எனவே கூட்டணி குறித்த எல்லா முடிவுகளையும் பாரதிய ஜனதா தலைமை அறிவிக்கும் என்று தெரிவித்தார்.

trichy vanathi sinivasan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe